புனேயில் தணிக்கையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

புனேயில் கூட்டுறவு துறையில் தணிக்கையாளரை தற்கொலைக்கு தூண்டியதாக 4 பேர் கைது

Update: 2022-09-21 20:45 GMT

புனே, 

புனேயில் கூட்டுறவு துறையில் தணிக்கையாளராக பணிபுரிந்து வந்தவர் கணேஷ் ஷிண்டே (வயது52). இவர் கடந்த 19-ந் தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் கணேஷ் ஷிண்டே ரூ.1 கோடி தனிநபர் கடன் பெற விண்ணப்பித்து இருந்தார். இதற்கிடையே அவருக்கு தெரிந்தவர்களான பிரவின் ரந்தாரா, பால்கிருஷ்ணா, கணேஷ் சாலுங்கே, மணிஷ் ஆகிய 4 பேரிடம் இருந்து கடன் பெற்று இருந்தார். இந்த பணத்தை திருப்பி கேட்டு அவரை தொந்தரவு செய்ததால் கணேஷ் ஷிண்டே தற்கொலை செய்து கொண்டதாக தெரியவந்தது. போலீசார் 4 பேர் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்