லாரி டிரைவரை அடித்து கொன்ற 4 பேர் கைது; வீடியோவால் பிடிபட்டனர்

லாரி டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் அடங்கிய வீடியோவால் அவர்கள் பிடிபட்டனர்.;

Update: 2023-10-04 19:00 GMT

வசாய், 

லாரி டிரைவரை அடித்து கொலை செய்த 4 பேரை போலீசார் கைது செய்தனர். தாக்குதல் அடங்கிய வீடியோவால் அவர்கள் பிடிபட்டனர்.

டிரைவர் மீது தாக்குதல்

பால்கர் மாவட்டம் நாலாச்சோப்ராவை சேர்ந்தவர் ராம்கிஷோர் (வயது40). லாரி டிரைவரான இவர் சம்பவத்தன்று குஜராத் மாநிலத்திற்கு கியாஸ் நிரம்பிய டேங்கர் லாரியை ஓட்டி சென்றார். மும்பை-ஆமதாபாத் நெடுஞ்சாலை மால்ஜிபாடா அருகே லாரி வந்த போது கார் ஒன்று முந்தி செல்ல முயன்றது. இதில் எதிர்பாராதவிதமாக காரின் மீது டேங்கர் லாரி உரசியதாக தெரிகிறது. இதனால் காரில் இருந்த 4 பேர் லாரியை வழிமறித்தனர். பின்னர் டிரைவர் ராம்கிஷோரிடம் வாக்குவாதம் செய்து அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கினர். படுகாயமடைந்த அவரை லாரியில் உள்ள இருக்கையில் அமர வைத்துவிட்டு அக்கும்பல் காரில் ஏறி தப்பிச்சென்றது.

4 பேர் கைது

இந்த சம்பவத்தை நேரில் கண்ட ஒருவர் செல்போனில் படம் பிடித்து ராம்கிஷோரின் உறவினருக்கு அனுப்பி வைத்தார். தகவல் அறிந்த அவரது உறவினர் அங்கு சென்று ராம்கிஷோரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து உறவினர்கள் மிராபயந்தர்-வசாய் விரார் போலீசில் புகார் அளித்தனர். மேலும் அவர் மீது தாக்குதல் நடத்திய வீடியோவை போலீசாரிடம் சமர்பித்தனர். போலீசார் வழக்கு பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை பிடிக்க விசாரித்தனர். காரின் பதிவெண்ைண வைத்து நேற்று முன்தினம் நாலாச்சோப்ராவில் பதுங்கி இருந்த 4 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்