பைகுல்லா உயிரியல் பூங்காவில் 6 ஆண்டுகளில் பென்குவின் பராமரிப்பு செலவு ரூ.30 கோடி

பைகுல்லா உயிரியல் பூங்காவில் பென்குவின் பராமரிப்புக்காக 6 ஆண்டுகளில் ரூ.30 கோடி செலவழித்து உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது

Update: 2023-09-08 11:37 GMT

மும்பை, 

மும்பை பைகுல்லாவில் வீர்மாதா ஜூஜாபாய் போசலே உதயன் என்ற உயிரியல் பூங்காவில் பார்வையாளர்களை கவருவதற்கு பிரத்யேகமாக பென்குவின் கூடம் அமைக்கப்பட்டது. வெளிநாட்டில் இருந்து பென்குவின் வரவழைக்கப்பட்டு அங்கு வளர்க்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் உயிரியல் பூங்காவில் உள்ள விலங்குகளின் பராமரிப்பு செலவு குறித்து சமூக நல ஆர்வலர் ஜிதேந்திர காட்கே என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேட்டு விண்ணப்பித்து இருந்தார். இது தொடர்பாக விடுத்துள்ள தகவலின் படி கடந்த 2018-ம் ஆண்டு முதல் 6 ஆண்டுகளில் பைகுல்லா உயிரியல் பூங்காவில் பென்குவின் கூடம் மற்றும் பராமரிப்பிற்காக மாநகராட்சி ரூ.29 கோடியே 43 லட்சம் வரையில் செலவிடப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. பென்குவின் பறவைகளை கொள்முதல் செய்ய ரூ.2 கோடியே 47 லட்சமும், கட்டமைப்பிற்கான செலவு ரூ.20 கோடி போன்றவை உள்அடங்கும். இதைத்தவிர சிங்கங்கள், ஓநாய்கள் மற்றும் நீர்நாய்கள் போன்ற விலங்குகளுக்காக முகாம் மற்றும் பராமரிப்பிற்காக மொத்தம் ரூ.20 கோடி செலவிடப்பட்டது. இதில் சிங்கத்திற்கு ரூ.8 கோடியே 25 லட்சம், ஓநாய்களுக்கு ரூ.7 கோடியே 15 லட்சம், நீர்நாய்களுக்கு ரூ.3 கோடியே 82 லட்சம் மாநகராட்சி செலவழித்து உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்