அண்டாப்ஹில் பகுதியில் சிறுமியை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் - கோர்ட்டு தீர்ப்பு

அண்டாப்ஹில் பகுதியில் சிறுமியை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

Update: 2023-06-18 19:30 GMT

மும்பை, 

அண்டாப்ஹில் பகுதியில் சிறுமியை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பு கூறியுள்ளது.

சிறுமி மானபங்கம்

மும்பை அண்டாப்ஹில் பகுதியில் 2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 26-ந் தேதி 13 வயது சிறுமி பொது கழிவறைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த 28 வயது தொழில் அதிபர் சிறுமியை கையை பிடித்து இழுத்து, மானபங்கம் செய்தார். சிறுமி வீட்டுக்கு சென்று நடந்த சம்பவத்தை அழுதபடி கூறினார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர், சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர்.

3 ஆண்டு ஜெயில்

போலீசார் சிறுமியை மானபங்கம் செய்த தொழில் அதிபர் மீது வழக்குப்பதிவு செய்து ஜூலை 6-ந் தேதி அவரை கைது செய்தனர். பின்னர் அவர் ஜூலை 20-ந் தேதி ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கு மீதான விசாரணை மும்பை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த கோர்ட்டு சிறுமியை மானபங்கம் செய்த தொழில் அதிபருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை வழங்கி தீர்ப்பு கூறியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்