போலீசார் என கூறி நவிமும்பையை சேர்ந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 3 பேர் கைது

போலீசார் என கூறி நவிமும்பையை சேர்ந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-09-17 19:30 GMT

நவிமும்பை, 

போலீசார் என கூறி நவிமும்பையை சேர்ந்தவரை கடத்தி பணம் பறிக்க முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடத்தல்

நவிமும்பையை சேர்ந்த ஒருவரை கடந்த 15-ந்தேதி தாங்கள் குற்றப்பிரிவு போலீசார் என கூறி 3 பேர் அணுகினர். வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கூறி அவரை வாகனத்தில் ஏற்றி அழைத்து சென்றனர். பின்னர் ரூ.50 ஆயிரம் பணம் தந்தால் உயிருடன் விடுவதாக மிரட்டினர். இவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவர் கும்பலிடம் இருந்து நைசாக தப்பித்தார். மேலும் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார்.

3 பேர் கைது

இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து கடத்தல் ஆசாமிகள் குறித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் ராஜ் காம்ளே (வயது41), சஞ்சய் காவ்கர் (52), தினேஷ் கங்காவானே (52) என்பது தெரியவந்தது. இவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த ஆசாமிகள் போலீசார் என கூறி அவரை கடத்தி சென்று பணம் பறிக்க முயன்றது தெரியவந்தது. இதுபோன்று வேறு யாரிடமும் பணம் பறிக்க முயன்றனரா என்பது குறித்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்