ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளிடம் உடைமைகள் திருடி வந்த 3 பேர் கைது

ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளை குறிவைத்து உடைமைகள் திருடி வந்த 3 பேர் பிடிபட்டனர்.

Update: 2023-08-23 18:45 GMT

தானே, 

ஓடும் எக்ஸ்பிரஸ் ரெயில்களில் பயணிகளை குறிவைத்து உடைமைகள் திருடி வந்த 3 பேர் பிடிபட்டனர்.

ரெயில் பயணிகளிடம் திருட்டு

எர்ணாகுளம்-ஹசரத் நிஜாமுதீன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கோவா மட்காவ் ரெயில் நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி கடந்த 12-ந் தேதி ரெயிலில் குடும்பத்துடன் சென்ற பயணி வைத்திருந்த ரூ.36 ஆயிரத்து 500 மதிப்புள்ள உடைமைகள் திருட்டு போனதாக ரெயில்வே போலீசாருக்கு புகார் வந்தது. இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சிறப்பு புலனாய்வு படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த விசாரணையில் 3 பேரின் அடையாளம் தெரியவந்தது. அவர்கள் பெயர் ரத்னகிரியை சேர்ந்த ரமீஷ்வர் குமார், குப்லால் கைலாஷ், பினோத் மகாதோ எனவும், 3 பேரும் சுமார் 28 வயதுடையவர்கள் எனவும் தெரியவந்தது. இவர்களை பிடித்து போலீசார் கைது செய்தனர்.

பறிமுதல்

இவர்களிடம் இருந்து நகைகள், 17 செல்போன்கள், டி.வி, ரூ.8.58 லட்சம் ரொக்கம் போன்றவை பறிமுதல் செய்யப்பட்டது. இவர்கள் மீது ஏற்கனவே ஓடும் ரெயில்களில் திருடியதாக 7 வழக்குகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதில் 4 வழக்குகள் பன்வெல் ரெயில்வே போலீசில் பதிவாகி இருந்தது. இவர்கள் எக்ஸ்பிரஸ் ரெயில் பயணிகளை குறிவைத்து ரத்னகிரி ஊரகம், கேரளாவின் திருச்சூர், கோட்டயம் மாவட்டங்களில் கைவரிசை காட்டி வந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்