தானேயில் சுவர் இடிந்து விழுந்து 3 குடிசை வீடுகள் சேதம்

தானே லோக்மானிய நகர் பகுதியில் தானேயில் சுவர் இடிந்து விழுந்து 3 குடிசை வீடுகள் சேதம்;

Update:2022-09-18 19:54 IST

தானே,

தானே லோக்மானிய நகர் பகுதியில் நேற்று பிற்பகல் 2 மணி அளவில் குடிசை வீடு ஒன்றின் சுவர் திடீரென இடிந்து விழுந்தது. இதன் இடிபாடுகள் பக்கத்து வீட்டின் மீது விழுந்ததால் அருகில் இருந்த மேலும் 2 குடிசை வீடுகளும் சேதமடைந்தது. இது பற்றி தகவல் அறிந்த மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு சென்றனர். நல்லவேளையாக அந்த வீடுகளில் யாரும் இல்லாததால் அசம்பாவிதம் எதுவும் ஏற்படவில்லை. தீயணைப்பு படையினருடன் சேர்ந்து அவர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்