மும்பையில் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 28 படுக்கைகள்

கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 28 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது.

Update: 2022-05-23 15:39 GMT

மும்பை,

கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் குரங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை அளிக்க 28 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பான ஏற்பாடுகளை மாநகராட்சி செய்துள்ளது.

அச்சுறுத்தும் குரங்கு காய்ச்சல்

கொரோனாவை தொடர்ந்து உலகின் சில நாடுகளில் 'மங்கி பாக்ஸ்' என அழைக்கப்படும் குரங்கு காய்ச்சல் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த நிலையில் குரங்கு காய்ச்சல் அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்த மும்பை மாநகராட்சி ஏற்பாடு செய்துள்ளது.

இதுகுறித்து மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உள்ள நாடுகளில் இருந்து வரும் பயணிகளை விமான நிலையத்தில் கண்காணித்து வருகிறோம். அறிகுறி இருப்பவர்களை தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதற்காக கஸ்துர்பா ஆஸ்பத்திரியில் 28 படுக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு தனிமைப்படுத்தப்படுவர்களிடம் இருந்து மாதிரிகள் சேகரிக்கப்பட்டு புனே தொற்றுநோய் பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

யாருக்கும் பாதிப்பு இல்லை

இருப்பினும் இதுவரை யாரும் குரங்கு காய்ச்சல் அறிகுறியால் பாதிக்கப்படவில்லை.

குரங்கு காய்ச்சல் பாதிக்கப்படுவர்களுக்கு பொதுவாக காய்ச்சல், சொறி மற்றும் வீங்கிய நிணநீர் போன்ற அறிகுறிகள் ஏற்படுகின்றன. மேலும் இது பல்வேறு மருத்துவ சிக்கல்களுக்கு வழிவகுக்கும். இது பொதுவாக 2 முதல் 4 வாரங்கள் வரை நீடிக்கும்.

இந்தவைரஸ் உடைந்த தோல், சுவாச பாதை அல்லது சளி சவ்வுகள் (கண்கள், மூக்கு அல்லது வாய்) வழியாக உடலுக்குள் நுழைவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்