துபாயில் இருந்து ரூ.1.39 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது

துபாயில் இருந்து ரூ.1.39 கோடி தங்கம் கடத்தி வந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-10-27 18:45 GMT

மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டில் இருந்து தங்கம் கடத்தி வரவுள்ளதாக சுங்க வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் துபாயில் இருந்து வந்த விமானத்தில் இறங்கிய பயணிகளிடம் சுங்கவரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இந்தியாவை சேர்ந்த 2 பெண்களின் உடைமைகளில் சோதனை நடத்தினர். இதில் எதுவும் சிக்காததால் தனி அறைக்கு அழைத்து சென்று சோதனை போட்டனர். அப்போது ஒரு பெண்ணின் முழங்கால்களின் கீழே துணியால் சுற்றப்பட்ட நிலையில் மெழுகு இருந்ததை கண்டனர். அதன் உள்ளே தங்கம் இருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். மற்றொரு பெண் அணிந்திருந்த ஜீன்ஸ் உடையின் அடிப்பகுதியில் பிசின் போன்ற பொருட்களால் தங்கத்தை மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இவர்களிடம் இருந்து 24 காரட் கொண்ட 2 கிலோ 65 கிராம் எடையுள்ள தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.1 கோடியே 39 லட்சம் ஆகும்.

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பெண்களையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.

-----------------------------

----

Tags:    

மேலும் செய்திகள்