ஆட்டோ டிரைவரிடம் லஞ்சம் வாங்கிய 2 போலீஸ்காரர்கள் அதிரடி கைது

ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update:2023-09-13 00:15 IST

மும்பை, 

ஆட்டோ டிரைவரிடம் ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய போக்குவரத்து போலீஸ்காரர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆட்டோ பறிமுதல்

நவிமும்பை மகாபே போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்களாக பணி புரிந்து வந்தவர் பிரவின் ராதோடு (வயது33), நம்தியோ கதேகர் (35). இவர்கள் சாலையில் வாகன கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது விதிமுறையை மீறி ஆட்டோ ஒன்று சென்றதை கண்ட அவர்கள் மறித்தனர். பின்னர் விதிமுறை மீறியதாக ஆட்டோவை பறிமுதல் செய்தனர். மேலும் ரூ.5 ஆயிரம் லஞ்சம் தந்தால் விட்டு விடுவதாக தெரிவித்தனர்.

அதிரடி கைது

இது தொடர்பாக நடத்திய பேரத்தில் ரூ.2 ஆயிரம் லஞ்சம் தருவதாக ஆட்டோ டிரைவர் தெரிவித்தார். பணம் தருவதாக தெரிவித்த டிரைவர் சம்பவம் குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். அவர்களின் யோசனைப்படி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இருந்த 2 போலீஸ்காரர்களை சந்தித்து லஞ்ச பணத்தை கொடுத்தார். இதனைபெற்ற 2 பேரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இவர்கள் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

-----------

Tags:    

மேலும் செய்திகள்