காஷிமிராவில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய பெண் உள்பட 2 பேர் கைது

தானே மாவட்டம் காஷிமிரா கமலேஷ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் சிறுமிகளை விபசாரத்தில் தள்ளிய பெண் உள்பட 2 பேர் கைது

Update: 2022-08-27 13:54 GMT

வசாய்,

தானே மாவட்டம் காஷிமிரா கமலேஷ் நகரில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் விபசாரம் நடந்து வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலி வாடிக்கையாளர் ஒருவரை அங்கு அனுப்பி விசாரணை நடத்தினர். இதில் ஒரு பெண் மற்றும் ஆண் ஆகியோர் தரகர்களாக செயல்பட்டு சிறுமிகளை வைத்து விபசாரம் நடத்தி வந்தது கண்டறியப்பட்டது. இது பற்றி அறிந்த போலீசார் அங்கு அதிரடி சோதனை நடத்தினர்.

இச்சோதனையில் குடியிருப்பில் இருந்த அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த 3 சிறுமிகளை மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர். விபசாரத்தில் ஈடுபடுத்திய 2 பேரையும் கைது செய்தனர். இது குறித்து மிராபயந்தர்-வசாய்விரார் போலீசார் வழக்கு பதிவு செய்து பிடிபட்ட 2 பேரிடம் சிறுமிகளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் எனவும், இதில் வேறு யாருக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்