அந்தேரியில் ரூ.4 கோடி போதைப்பொருள் கடத்திய 2 பேர் சிக்கினர்
அந்தேரி பகுதியில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருட்களை கடத்தி வந்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்
மும்பை,
மும்பை அந்தேரி டி.என். சாலையில் போதைப்பொருள் கடத்தப்பட உள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் கில்பர்ட் ஹில் சாலையில் தீவிரமாக கண்காணித்து வந்தனர். அப்போது சந்தேகப்படும் படி 2 பேர் நடமாடியதை கண்ட போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். அவர்கள் வைத்திருந்த உடைமைகளை சோதனை போட்டதில் 2 கிலோ எடையுள்ள மெபட்டிரோன் போதைப்பொருள் இருந்தது தெரியவந்தது. இவற்றின் மதிப்பு ரூ.4 கோடி ஆகும். இது குறித்து டி.என். நகர் போலீசார் வழக்கு பதிவு செய்து 2 பேரை கைது செய்தனர். போதைப்பொருளை எங்கிருந்து கடத்தி கொண்டு வந்தனர் என்பது தொடர்பாக அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.