72 வழக்குகளில் தொடர்புடைய 2 பேர் கைது

போரிவிலியில் நிறுத்தி இருந்த காரில் திருடிய 2 பேர் கைது. 72 வழக்குகளில் தொடர்புடையவர்கள் என தெரிய வந்தது;

Update: 2023-09-12 19:45 GMT

மும்பை, 

மும்பை போரிவிலியில் நிறுத்தி இருந்த காரின் கண்ணாடியை உடைத்து 2 பேர் அதில் இருந்த ரூ.2 லட்சம் மதிப்புள்ள நகை, பணத்தை திருடிச்சென்றனர். தகவல் அறிந்த காரின் உரிமையாளர் போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அங்கிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரித்து வந்தனர். இதில் 2 பேரின் அடையாளம் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சர்புதீன் சேக் (வயது55) என்பவரை பிடித்து கைது செய்தனர். இவர் மீது பல்வேறு போலீஸ் நிலையங்களில் 22 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது. இவரது கூட்டாளியான ஷேரா சவான் (39) நாசிக் மாவட்டத்தில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று அவரையும் பிடித்து கைது செய்தனர். இவர் மீதும் 50 குற்ற வழக்குகள் பதிவாகி இருந்தது தெரியவந்தது.

Tags:    

மேலும் செய்திகள்