கசாரா வனப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்து 2 பேர் பலி
கசாரா வனப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
தானே,
கசாரா வனப்பகுதியில் 400 அடி பள்ளத்தில் லாரி பாய்ந்த விபத்தில் 2 பேர் பலியாகினர்.
பள்ளத்தில் பாய்ந்தது
மும்பை-நாசிக் நெடுஞ்சாலையில் கசாரா காட் என்ற வனப்பகுதியில் சரக்கு லாரி சென்று கொண்டு இருந்தது. இந்த லாரியில் டிரைவர், கிளீனர் உள்பட 3 பேர் இருந்தனர். வளைவுகள் கொண்ட சாலையில் நேற்று அதிகாலை சரக்கு லாரி சென்று கொண்டு இருந்தது. அப்போது அங்குள்ள வளைவில் டிரைவர் லாரியை திரும்ப முயன்றார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையை விட்டு விலகி 400 அடி பள்ளத்தாக்கில் பாய்ந்தது.
2 பேர் பலி
இந்த துயர விபத்தில் லாரியில் இருந்த 3 பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்த கசாரா போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பள்ளத்தாக்கில் விழுந்த லாரியில் சிக்கி இருந்த 3 பேரையும் மீட்டனர். இதில் 2 பேர் உயிரிழந்தது தெரியவந்தது. காயமடைந்த லாரி டிரைவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விபத்து குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.