கோவண்டியில் 2 போலி டாக்டர்கள் கைது

கோவண்டியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டார்.

Update: 2023-07-16 19:30 GMT

மும்பை, 

கோவண்டியில் 2 போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டார்.

போலி டாக்டர்

மும்பை கோவண்டி எம் கிழக்கு வார்டு பகுதியில் போலி டாக்டர்கள் பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வருவதாக மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு புகார் கிடைத்தது. இந்த புகாரின்படி அதிகாரிகள் சிவாஜி நகர் போலீசாருடன் அங்கு சென்று அங்குள்ள கிளினிக்குகளில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின் போது, டாக்டர் சாஜித் சேக் என்ற பெயரில் செயல்பட்டு வந்த கிளினிக்கில் இருந்த டாக்டர் முகமது அப்சல் சேக்(வயது24) என்பவரிடம் சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரித்தனர். இதில் அவர் முறையான மருத்துவ சான்றிதழ் இன்றி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில், அவர் 12-ம் வகுப்பு படித்துவிட்டு, சாஜித் சேக் என்ற டாக்டரிடம் 3 ஆண்டாக உதவியாளராக வேலை பார்த்து வந்து உள்ளார்.

கைது

பின்னர் அவரது பெயரில் கிளினிக் தொடங்கி பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சாஜித் சேக் என்பவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர். பி.ஏ.எம்.எஸ் ஆயுர்வேதம் படித்துவிட்டு சான்றிதழில் எம்.பி.பி.எஸ் டாக்டராக பதிவு செய்து, ஆங்கில மருத்துவ சிகிச்சை அளித்து வந்தது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து போலி டாக்டர்கள் முகமது அப்சல் சேக், சாஜித் சேக்கை கைது செய்தனர். பிடிபட்ட சாஜித் சேக் சிவாஜி நகர் உள்பட பல இடங்களில் அவரது பெயரில் கிளினிக் நடத்தி வருமானம் பார்த்து வந்து உள்ளார் என தெரியவந்தது.


Tags:    

மேலும் செய்திகள்