தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்கு 15 நாள் கெடு- உத்தவ் சிவசேனா எச்சரிக்கை

தானே மாநகராட்சியில் தீர்க்கப்படாத பிரச்சினைகளை முடிக்க உத்தவ் சிவசேனா கட்சி மாநகராட்சிக்கு 15 நாள் கெடு வழஙகி உள்ளது.

Update: 2023-10-12 18:45 GMT

தானே, 

உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தானே பகுதி தலைவரான கேதார் டி.கே. தலைமையிலான குழுவினர் நேற்று தானே மாநகராட்சி கமிஷனர் அபிஜித் பாங்கரை சந்தித்து மாநகராட்சியில் தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சினைகளை 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும் என்று காலக்கெடு விதித்தனர். அவர்கள் கமிஷனரிடம் கொடுத்த மனுவில் கூறி இருப்பதாவது:-

தானே நகரில் உள்ள சட்டவிரோத கட்டிடங்களை இடித்து அகற்ற வேண்டும். கோப்ரியில் உள்ள சுடுகாடு தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும். நகரில் மூடப்பட்டு உள்ள அனைத்து பொது கழிவறைகளையும் திறக்க வேண்டும். சாலைகளில் வாகனங்கள் நெருக்கடி இன்றி சென்று வருவதற்கு ஏதுவாக சாலை நடுவே உள்ள தடுப்புகளை அகற்ற வேண்டும். எங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றவதுடன், அடுத்த 15 நாட்களுக்குள் தவறு செய்த ஊழியர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் வரி செலுத்த வேண்டாம் என்று எங்கள் கட்சி சார்பில் பொதுமக்களிடம் வலியுறுத்தும் போராட்டத்தை தொடங்குவோம் என்று மாநகராட்சி கமிஷனருக்கு இறுதி எச்சரிக்கை விடுக்கிறோம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்