சிறுவனை மிரட்டி தகாத உறவு- வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல்

மும்பையை சேர்ந்த 12 வயது சிறுவனை மிரட்டி தகாத உறவு வாலிபருக்கு 10 ஆண்டு;

Update:2022-09-11 21:39 IST

மும்பை,

மும்பையை சேர்ந்த 12 வயது சிறுவன் தனது பெற்றோருடன் வசித்து வருகிறான். கடந்த 2019-ம் ஆண்டு சிறுவனின் பக்கத்து வீட்டை சேர்ந்த 23 வயது வாலிபர் தனது ஆசைக்கு இணங்கினால் ரூ.100 தருவதாக சிறுவனிடம் தெரிவித்தார். பின்னர் சிறுவனிடம் வாலிபர் ஒரினச்சேர்க்கையில் ஈடுபட்டார். அவர் தந்த பணத்தை சிறுவன் உண்டியலில் போட்டு உள்ளான். இதனை கண்ட சிறுவனின் தாய் சந்தேகம் அடைந்து பணம் தொடர்பாக விசாரித்தார். இதனை தொடர்ந்து சிறுவனுக்கு நேர்ந்த கொடுமை வெளிச்சத்திற்கு வந்தது. இது பற்றி சிறுவனின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

இந்த புகாரின் படி பக்கத்து வீட்டு வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு, சிறப்பு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு விசாரணையின் போது வாலிபர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து நீதிபதி வாலிபருக்கு 10 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்