'இந்தியா: மோடிக்கான கேள்விகள்' என்ற ஆவணப்படத்தை நீக்கியது யூடியூப்...!

குஜராத் கலவரம் குறித்த பிபிசி ஆவணப்படத்து மத்திய அரசு கடும் எதிர்ப்பை தெரிவித்த நிலையில் யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியது.;

Update: 2023-01-20 02:02 GMT

புதுடெல்லி,

கடந்த 2002-ம் ஆண்டு நிகழ்ந்த குஜராத் கலவரத்தோடு, அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடியை தொடர்புபடுத்தி பிபிசி ஆவணப்படம் தயாரித்துள்ளது. பிரதமர் மோடிக்கும் இஸ்லாமிய சிறுபான்மையினருக்கும் இடையிலான பதற்றத்தை பாருங்கள் எனவும் கலவரத்தில் மோடியின் பங்கு குறித்து விசாரிக்க வேண்டும் என்பதை இது வலியுறுத்துகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வீடியோ பலரால் பகிரப்பட்டு, விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியுறவுத் துறை செய்தித்தொடர்பாளர் அரிந்தம் பக்சி பேசியபோது, இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக இந்த ஆவணப்படம் உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். ஒரு சார்பான ஆவணப்படம், காலனியாதிக்க மனோபாவம் இன்னமும் தொடர்வதை காட்டுகிறது.

இந்த ஆவணப்படம் கண்ணியமானது அல்ல எனவும் கடுமையாக சாடினார். இந்த ஆவணப்படங்களை இந்தியாவில் ஒளிபரப்ப முடியாது என அவர் கூறிய நிலையில், யூடியூப் நிறுவனம் ஆவணப்படத்தை தனது தளத்திலிருந்து நீக்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்