மாணவர் அமைப்பினர் கைதை கண்டித்து பெங்களூருவில் இளைஞர் காங்கிரசார் போராட்டம்

மாணவர் அமைப்பினர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூருரவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினார்கள்.;

Update: 2022-06-04 21:56 GMT

பெங்களூருவில் இளைஞர் காங்கிரஸ் கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டபோது எடுத்தபடம்.

பெங்களூரு:

துமகூரு மாவட்டம் திப்தூரில் உள்ள மந்திரி பி.சி.நாகேசின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைய முயன்றதாக மாணவர் அமைப்பினர், காங்கிரசார் என 22 பேர் கைது செய்யப்பட்டதை கண்டித்து பெங்களூரு சுதந்திர பூங்காவில் நேற்று கர்நாடக இளைஞர் காங்கிரசார் போராட்டத்தில் ஈடுபட்டனர். இளைஞர் அணி தலைவர் முகமது நலபட் தலைமையில் நடந்த போராட்டத்தில் காங்கிரசார், தேசிய மாணவர் அமைப்பினர் கலந்துகொண்டனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள் 22 பேர் கைதை கண்டித்தும், மாநில அரசுக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர்.

இந்த சந்தர்ப்பத்தில் உருவப்பொம்மையில் அணியப்பட்டு இருந்த ஆர்.எஸ்.எஸ். டவுசரை காங்கிரசார் எரிக்க முயன்று உள்ளனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார், போராட்டக்காரர்கள் இடையே வாக்குவாதம் உண்டானது. இதன்பின்னர் முகமது நலபட் உள்பட போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்து வேனில் ஏற்றினர். அப்போது வேனில் இருந்து வெளியே குதித்த முகமது நலபட் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினார். பின்னர் அவரை மீண்டும் போலீசார் வேனில் ஏற்றி அழைத்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்