ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை

விஜயாப்புராவில் ஆயுதங்களால் தாக்கி வாலிபர் கொலை செய்யப்பட்டார்.;

Update: 2022-08-26 20:26 GMT

விஜயாப்புரா:

விஜயாப்புரா மாவட்டம் அலமேலு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியை சேர்ந்தவர் பிரசாந்த் (வயது 27). இவர், கடந்த 3 நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே சென்றார். ஆனால் அவர் திரும்பி வரவில்லை. இதுகுறித்து அலமேலு போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை தேடிவந்தனர். கடந்த 23-ந் தேதி பிரசாந்த் தனது நண்பரான வசீருடன் தான் கடைசியாக செல்போனில் பேசி இருந்ததும், அவரை சந்தித்து பேசி விட்டு வருவதாகவும் பெற்றோரிடம் கூறிவிட்டு சென்றதும் தெரிந்தது. இதையடுத்து, வசீரை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

அப்போது பிரசாந்தை கொலை செய்து விட்டதாக வசீர் கூறினார். விசாரணையில், வசீரின் உறவினர் மனைவியுடன் பிரசாந்த் பழகி வந்ததால் அவரை கொலை செய்தது தெரியவந்தது. இதுதொடர்பாக வசீர் உள்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்