மைனர் பெண்ணை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோவில் கைது; வாட்ஸ்-அப் மூலம் பழக்கம்

சுள்ளியா அருகே, மைனர் பெண்ணை கர்ப்பமாகிய வாலிபரை போலீசார் போக்ேசாவில் கைது செய்துள்ளனர்.

Update: 2022-09-28 18:45 GMT

மங்களூரு;

மைனர் பெண் பலாத்காரம்

தட்சிண கன்னடா மாவட்டம் சுள்ளியா தாலுகா மிட்டூர் உபரட்கா பகுதியை சேர்ந்தவர் தீர்த்தபிரசாத்(வயது 25). இதே போல் சுள்ளியாவில் மைனர் பெண் ஒருவர் தனது பெற்ேறாருடன் வசித்து வருகிறார். இந்த நிலையில் தீா்த்தபிரசாத்துக்கும், மைனர் பெண்ணுக்கும் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வாட்ஸ்-அப் குழு மூலம் பழக்கம் ஏற்பட்டு உள்ளது.

இதனால் இருவரும் செல்போனில் பேசிவந்துள்ளனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீா்த்த பிரசாத், மைனர் பெண்ணை தனது நண்பரின் வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வீட்டில் யாரும் இல்லை என தெரிகிறது. இந்த நிலையில் அங்கு வைத்து மைனர் பெண்ணை வலுக்கட்டாயமாக தீர்த்த பிரசாத் பலாத்காரம் செய்துள்ளார்.

கர்ப்பம்

பின்னர் இதுகுறித்து பெற்றோாிடம் கூறினால் கொலை செய்து விடுவேன் என்று கூறி மிரட்டல் விடுத்து அனுப்பி வைத்துள்ளார். இதனால் பயந்துபோன மைனர் பெண், தன் பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை கூறவில்லை என தெரிகிறது. இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக மாணவி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அச்சம் கொண்ட அவளது தந்தை, மைனர் பெண்ணை சுள்ளியாவில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு மைனர் பெண்ணை டாக்டர்கள் பரிசோதித்த போது அவள் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து டாக்டர்கள், மைனர் பெண்ணின் பெற்றோரிடம் தெரிவித்தனர். இதைக்கேட்டு மைனர்பெண்ணின் தந்தை அதிர்ச்சி அடைந்தார். பின்னர் நடந்த சம்பவம் குறித்து மைனர் பெண், தனது தந்தையிடம் கதறி அழுதபடி கூறியுள்ளார்.

போக்சோவில் கைது

இதுகுறித்து மைனர் பெண்ணின் தந்தை கடந்த 26-ந்தேதி சுள்ளியா போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மைனர் பெண்ணை பலாத்காரம் செய்த தீர்த்தபிரசாத்தை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மேலும் அவரை மாவட்ட போக்சோ சிறப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். தற்போது தீர்த்தபிரசாத் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்