தங்க நகை திருடிய வாலிபர் கைது
தங்க நகை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்
மைசூரு,
மைசூரு மாவட்டம் அசோக் ரோட்டில் தங்கநகைக்கடை ஒன்று உள்ளது. நேற்று முன்தினம் இந்த நகைக்கடைக்கு மர்ம நபர் ஒருவர் வந்தார். அவர் நகை வாங்க இருப்பதாக கூறி, கடையின் ஊழியர்களிடம் அனைத்து நகைகளை எடுத்து வைக்கும்படி கூறினார்.
இதை கேட்ட ஊழியர்களும் அனைத்து நகைகளையும் எடுத்து வைத்தனர். அப்போது நகைகள் அனைத்தையும் பார்த்து கொண்டிருந்த மர்ம நபர் திடீரென்று ஒரு தங்க சங்கிலியை எடுத்து தனது ஆடைக்குள் மறைத்து கொண்டார்.
இதை நகைக்கடை ஊழியர்கள் அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள் மூலம் பார்த்துவிட்டனர். உடனே நகைக்கடை ஊழியர்கள் இதுகுறித்து லஸ்கர் மொகல்லா போலீசிற்கு தகவல் அளித்தனர் சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மர்ம நபரை மடக்கி பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவரிடம் 40 கிராம் தங்க சங்கலி இருந்தது.
அதை பறிமுதல் செய்த போலீசார் அந்த நபரை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில் அவர் ஹாசன் மாவட்டத்தை சேர்ந்த பிரதாப் என்பது தெரியவந்தது. இதுகுறித்து அவர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.