'ராமர் கோவிலுக்கு செல்ல அழைப்பிதழ் தேவையில்லை; எப்போது வேண்டுமானாலும் செல்வேன்' - உத்தவ் தாக்கரே
தனக்கு இதுவரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வரவில்லை என்று உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.
மும்பை,
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலின் குடமுழுக்கு விழா அடுத்த மாதம் 22-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவில் பங்கேற்க பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மராட்டிய மாநிலம் உத்தவ் பாலாசாகேப் தாக்கரே சிவசேனா கட்சியின் தலைவரான உத்தவ் தாக்கரே, தனக்கு இதுவரை ராமர் கோவில் திறப்பு விழாவிற்கான அழைப்பிதழ் வரவில்லை என்று கூறியுள்ளார். மேலும், "ராமர் கோவிலுக்குச் செல்ல அழைப்பிதழ் தேவையில்லை. ராமர் எல்லோருக்கும் பொதுவானாவர். எப்போது வேண்டுமானாலும் அயோத்தி ராமர் கோவிலுக்கு நான் செல்வேன்" என்று தெரிவித்துள்ளார்.