பிரதமர் மோடிக்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்த எடியூரப்பா
பிரதமர் நரேந்திர மோடியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எடியூரப்பா நன்றி தெரிவித்தார்.
பெங்களூரு:
பா.ஜனதா உயர்நிலை குழு உறுப்பினராகவும், தேசிய தேர்தல் குழு உறுப்பினராகவும் எடியூரப்பா நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து பிரதமர் மோடியை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய எடியூரப்பா, தனக்கு இந்த உயர்ந்த பதவி வழங்கியதற்காக நன்றி தெரிவித்து கொள்வதாக கூறினார்.
அதற்கு மோடி, தங்களின் அரசியல் அனுபவத்தை பயன்படுத்தி கர்நாடகம் மட்டுமின்றி தென்இந்திய மாநிலங்களில் சுற்றுப்பயணம் செய்து கட்சியை பலப்படுத்துங்கள் என்று கேட்டு கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.