ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு தொகுதிகள் முடிவானதாக யூகத்தின் அடிப்படையில் கருத்து கூறினேன்; எடியூரப்பா பேட்டி

ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு தொகுதிகள் முடிவானதாக யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாக எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2023-09-13 21:40 GMT

பெங்களூரு:

ஜனதாதளம் (எஸ்) கட்சிக்கு தொகுதிகள் முடிவானதாக யூகத்தின் அடிப்படையில் கருத்து தெரிவித்ததாக எடியூரப்பா கூறியுள்ளார்.

நான் பேச மாட்டேன்

கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியும், பா.ஜனதா மூத்த தலைவருமான எடியூரப்பா நேற்று டெல்லி புறப்பட்டு சென்றார், அங்கு நடைபெற்ற பா.ஜனதா தேர்தல் குழு கூட்டத்தில் அவர் கலந்து கொண்டார். முன்னதாக அங்கு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாடாளுமன்ற தேர்தலையொட்டி பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளன. தொகுதி பங்கீடு குறித்து இன்னும் முடிவாகவில்லை. ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க உள்துறை மந்திரி அமித்ஷா முடிவு செய்துள்ளதாக நான் யூகத்தின் அடிப்படையில் கூறிவிட்டேன். அது உண்மை இல்லை. இன்று (நேற்று) நடைபெறும் கூட்டத்தில் கூட்டணி குறித்து நான் பேச மாட்டேன்.

விவசாயிகளின் நலன்

தலைவர்கள் இதுபற்றி ஏதாவது என்னிடம் தகவல்கள் கேட்டால் அதுபற்றி நான் கூறுவேன். தொகுதி பங்கீடு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. கா்நாடகத்தில் பா.ஜனதா மாநில தலைவா் மற்றும் எதிா்க்கட்சி தலைவா் விைரவில் நியமிக்கப்படுவார்கள். கர்நாடகத்தில் காவிரி அணைகளில் தண்ணீர் இல்லை. ஆனால் ஒழுங்காற்று குழு தண்ணீர் திறக்கும்படி உத்தரவிட்டுள்ளது. கர்நாடக விவசாயிகளின் நலனை அரசு காக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தமிழகத்திற்கு தண்ணீர் திறக்கக்கூடாது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதா-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி குறித்த தகவலை முதலில் பகிரங்கப்படுத்தியவர் எடியூரப்பா. அக்கட்சிக்கு 4 தொகுதிகள் ஒதுக்க அமித்ஷா முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இது கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது. கூட்டணி குறித்த தகவலை ஒப்புக்கொண்ட தேவேகவுடா, எத்தனை தொகுதிகள் என்பது குறித்து பேசவில்லை என்று கூறி மறுப்பு தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்