சுவாச பிரச்சினை: சீதாராம் யெச்சூரிக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை
சுவாச பிரச்சினை காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சீதாராம் யெச்சூரிக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.;
டெல்லி,
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி. 72 வயதான சீதாராம் யெச்சூரிக்கு சமீபத்தில் சுவாச பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து அவர் கடந்த 19ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த சில நாட்களுக்கு முன் கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொண்டிருந்த சீதாராம் யெச்சூரிக்கு சுவாச பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
அவருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர் தொடர்ந்து எய்ம்ஸ் மருத்துவக்குழு கண்காணிப்பில் இருப்பார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு தெரிவித்துள்ளது.