மல்யுத்த வீரர்களுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு

பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் நடத்தப்படும் விதம் கவலையளிப்பதாகவும் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தெரிவித்துள்ளனர்.

Update: 2023-06-02 10:31 GMT

புதுடெல்லி,

இந்திய மல்யுத்த சம்மேளன தலைவரும் பாஜக மந்திரியுமான பிரிஜ்பூஷண் சரண்சிங் மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்த மல்யுத்த வீரர்கள், வீராங்கனைகள் கடந்த ஏப்ரல் 27ம் தேதி முதல் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை நாடாளுமன்ற புதிய கட்டிடம் திறப்பு விழாவின் போது மல்யுத்த வீரர், வீராங்கனைகள் பேரணியாக நாடாளுமன்றம் நோக்கி செல்ல முயன்றனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார் மல்யுத்த வீரர், வீராங்கனைகள் போராட்டம் நடத்திய பகுதியையும் அப்புறப்படுத்தினர். மேலும், மல்யுத்த வீரர்களுக்கு ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அனுமதி வழங்கப்படாது என டெல்லி போலீசார் நேற்று தெரிவித்தனர்.

இதனிடையே, பாலியல் புகாரில் சிக்கியுள்ள பாஜக மந்திரியும், இந்திய மல்யுத்த சம்மேளன தலைவருமான பிரிஜ்பூஷண் மீது நடவடிக்கை எடுக்கப்படாததை கண்டித்து தேசிய சர்வதேச போட்டிகளில் நாட்டிற்காக வென்ற பதங்களை கங்கை நதியில் வீசப்போவதாக மல்யுத்த வீரர் வீராங்கனைகள் தெரிவித்தனர். மல்யுத்த வீராங்கணைகளுக்கு விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பில் இருந்து ஆதரவுகள் வந்த வண்னம் உள்ளன.

இந்த நிலையில், தற்போது மல்யுத்த வீராங்கணைகளுக்கு கபில்தேவ் உள்ளிட்ட முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். கடந்த 1983ம் ஆண்டு சாம்பியன் பட்டம் வெற்ற இந்திய கிரிக்கெட் வீரர்கள் இந்த விவகாரம் தொடர்பாக கூட்டாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.

அந்த அறிக்கையில், எங்களது சாம்பியன்கள் மனிதாபிமானமற்ற முறையில் கையாளப்பட்டு உள்ளனர் என்று அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். பதக்கம் வென்ற வீரர், வீராங்கணைகள் நடத்தப்படும் விதம் கவலையளிப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், பதக்கங்களை தூக்கி எரிவது போன்ற கடினமான முடிவுகளை எடுக்கவேண்டாம் என அவர்கள் மல்யுத்த வீரர்களுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.  

Tags:    

மேலும் செய்திகள்