மருத்து துறையில் இந்தியாவை ஆராய்ச்சி மையமாக மாற்ற அரசு விரும்புகிறது - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா

மருந்துத் துறையில் நாடு ஒரு ஆராய்ச்சி மையமாக உருவெடுக்க அரசாங்கம் விரும்புகிறது என மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-17 16:20 GMT

ஐதராபாத்,

ஐதராபாத்தில் உயிரியல் மருத்துவ ஆராய்ச்சிக்கான தேசிய விலங்கு சார் வசதி ஆராய்ச்சி மையத்தை மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா திறந்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், மருந்து துறையில் இந்தியாவை ஆராய்ச்சி மையமாக மாற்ற விரும்புகிறோம். இந்தியா இப்போது உலகின் மருந்தகமாக உள்ளது . நாட்டில் 10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் மருந்து அலகுகளில் மருந்துக்கான சூத்திரங்கள் மற்றும் மருந்துகளை தயாரிக்கின்றன.

இந்தியாவில் மருந்து துறையில் ஆராய்ச்சி செய்வதற்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட வேண்டும். அதற்கு, விலங்கு சார் ஆராய்ச்சி வசதி மிகவும் முக்கியமானது. இந்த நிறுவனத்தில் விலங்கு சார் ஆராய்ச்சி வசதி கிடைக்கிறது. இங்கு பணிபுரியும் நமது விஞ்ஞானிகள் இந்த நிறுவனத்தைப் பயன்படுத்தி, நாட்டின் ஆராய்ச்சியில் முக்கியப் பங்காற்றுவார்கள் என்று நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக, மத்திய மந்திரி மாண்டவியா, ஐதராபாத்தில் உள்ள தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்திற்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். அங்கு விஞ்ஞானிகள் மற்றும் மாணவர்களை சந்தித்து கலந்துரையாடினார்.

Tags:    

மேலும் செய்திகள்