கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்ற உலகின் அதிக வயதான மூதாட்டி மரணம்

கேரளாவை சேர்ந்த உலகின் அதிக வயதான மூதாட்டி உடல்நலக்குறைவால் காலமானார்.;

Update: 2024-05-04 18:58 GMT

மலப்புரம்,

உலகின் அதிக வயதான மூதாட்டி குஞ்சீரம்மா. 121 வயதான இவர், கேரள மாநிலம் வளன்சேரி அருகே உள்ள பூகுட்டரி பகுதியில் வசித்து வந்தார். உலகிலேயே அதிக வயதுடைய பெண் என உலக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

இந்த நிலையில் உடல்நல குறைவு காரணமாக குஞ்சீரம்மா நேற்று மரணம் அடைந்தார். 5 தலைமுறை கண்ட இவருக்கு, சர்க்கரை நோய், ரத்தஅழுத்தம் என எந்த நோயும் இல்லை. 17 வயதில் செய்யது அலி என்பவரை திருமணம் செய்த இவருக்கு 11 குழந்தைகள் இருந்தனர். சுதந்திர போராட்டத்திலும் குஞ்சீரம்மா பங்கேற்று இருந்தது குறிப்பிடத்தக்கது.

 

Tags:    

மேலும் செய்திகள்