வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை, கொள்ளை; 4 பேர் கைது

வீட்டில் தனியாக இருக்கும் பெண்களை குறிவைத்து கொலை, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.;

Update: 2022-07-27 15:12 GMT

உப்பள்ளி;

தார்வார் மாவட்டம் உப்பள்ளி தாலுகா கல்கட்டகி கிராமத்தில் கடந்த மே மாதம் 11-ந் தேதி இந்திரா பாய் பவார்(வயது 60) என்பவர் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து கடந்த 2-ந் தேதி மகாதேவி நெலண்ணவர்(50) என்ற பெண்ணும் படுகொலை செய்யப்பட்டார்.

இந்த கொலை சம்பவங்கள் குறித்து உப்பள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது கிடைத்த தகவலின் பேரில் உப்பள்ளி பகுதியில் கூலி வேலை செய்து வந்த 4 பேரை கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் தேவராஜ் மொகலா, கள்ளப்பா ரோகண்ணவர், பசவராஜ் வாளதா, முகமது ரபீக், சிவானந்த் கெஞ்சன்னவர் என்று தெரியவந்தது.

அனைவரும் ஒரே இடத்தில் வேலை பார்த்து வந்தனர். இரவு குடிபோதையில் ஒன்றாக சேர்ந்து கொலை, கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றி வந்துள்ளனர். குறிப்பாக வீடுகளில் தனியாக இருக்கும் பெண்களை கொலை செய்து நகை, பணத்தை கொள்ளையடிப்பதை வழக்கமாக கொண்டிருந்தனர்.

இந்த 2 கொலைகளையும் இவர்கள்தான் செய்துள்ளனர் என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து உப்பள்ளி போலீசார் 4 பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்