தோழிகளுடன் கள் குடிப்பதை இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட பெண் கைது - வைரல் வீடியோ

கள்ளு கடைக்கு சென்ற பெண்கள் கள் குடிக்கும் வீடியோவை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

Update: 2023-03-25 11:02 GMT

திருவனந்தபுரம்,

கேரள மாநிலம் திரிச்சூர் மாவட்டம் ஷர்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் அஞ்சனா. இவர் தனது தோழிகளுடன் கண்டொலிகடவு பகுதியில் உள்ள கள்ளுக்கடைக்கு சென்றுள்ளார்.

அங்கு அஞ்சனா தனது தோழிகளுடன் சேர்ந்து கள் குடித்துள்ளார். அசைவ 'சைடிஸ்' உணவுகளுடன் தோழிகளுடன் சேர்ந்து கள் குடிப்பதை அஞ்சனா தனது செல்போனில் வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர் அந்த வீடியோவை எடிட் செய்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

இந்த வீடியோ சமூகவலைதளத்தில் வைரலான நிலையில் மதுபானத்தை குடிக்குமாறு சட்டவிரோதமாக விளம்பரம் செய்தாக வழக்குப்பதிவு செய்த கலால்துறை அதிகாரிகள் அஞ்சனாவை கைது செய்தனர். பின்னர் அவர் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.


Tags:    

மேலும் செய்திகள்