திருமணமானவர் என தெரிந்தும் பாலியல் உறவில் இருந்த பெண் - கேரள ஐகோர்ட்டு அதிரடி தீர்ப்பு

திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

Update: 2022-10-10 09:00 GMT

திருவனந்தபுரம்,

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால், அது பாலியல் வன்கொடுமை ஆகாது என்று கேரள ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய ஒருவர், திருமணம் செய்து கொள்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்ததாகவும், தற்பொழுது அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

அதனடிப்படையில் அந்த நபர் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனு விசாரணைக்கு வந்தது. அதில், தனக்கு திருமணம் ஆனது தெரிந்தே இசைக்குழுவில் இருந்த பெண், தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், தன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் முறையிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை திருமண உறுதிமொழி குற்றச்சாட்டாக சேர்க்க முடியாது என்றார். காதல் என்ற பெயரில் உறவில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்