தெலுங்கானாவில் பெண் பயங்கரவாதி போலீசாரிடம் சரண்
தெலுங்கானாவில் 22 போலீசார் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் பயங்கரவாதி போலீசாரிடம் சரணடைந்தார்.;
ஐதராபாத்,
சத்தீஸ்காரில் 2021-ம் ஆண்டு 22 சி.ஆர்.பி.எப். ஆயுதப்படை வீரர்கள், மாவோயிஸ்ட் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு பலியான சம்பவத்தை யாராலும் மறக்க முடியாது.
இந்த சம்பவம் உள்பட 9 முக்கிய பயங்கரவாத செயல்களில் தொடர்புடைய பெண் மாவோயிஸ்ட் பயங்கரவாதி ரவுலு சாவித்ரி. போலீசாரால் தேடப்படும் முக்கிய குற்றவாளியான அவர் மாவோயிஸ்ட் இயக்கத்தில் உயர் பொறுப்பு வகித்து வந்தவர் ஆவார். அவரை மாதவி கதிமி, ரவுலா கதிமி, ரவுலு சாவித்ரி என்கிற சாவித்ரி என பல பெயர்களில் அழைத்து வருகிறார்கள். தேடப்பட்ட பயங்கரவாதியான சாவித்ரி, நேற்று தெலுங்கானா போலீசார் முன்னிலையில் சரண் அடைந்தார்.
தற்போது 46 வயதாகும் சாவித்ரி, சத்தீஸ்காரின் சிந்தகுப்பா கிராமத்தை சேர்ந்தவர். 13 வயது முதலே மாவோயிஸ்ட் அமைப்பில் இணைந்து செயல்பட்டவர். அவரது தலைக்கு சத்தீஸ்கார் அரசு ரூ.10 லட்சம் பரிசு அறிவித்து தேடி வந்தது.