கள்ளக்காதலனின் மனைவி மீது ஆசிட் வீசிய பெண் - நான் அழகாக இருக்கும்போது உன் மீது ஏன் காதலில் விழுந்தார்? என கேட்டதால் ஆத்திரம்

'உன்னை விட நான் மிகவும் அழகாக இருக்கும்போது என் கணவர் ஏன் உன் மீது காதலில் விழுந்தார்?' என்று கேட்டுள்ளார்.

Update: 2022-12-06 06:16 GMT

 மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டம் யசோதா நகர் பகுதியை சேர்ந்தவர் புரங்கி வர்மா. டிரைவரான இவருக்கு திருமணமாகி லதா (வயது 24) என்ற மனைவியும், 2 வயதில் குழந்தையும் உள்ளது.

இதனிடையே, புரங்கி வர்மாவுக்கு அதேபகுதியை சேர்ந்த ஜியா (வயது 25) என்ற பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இது குறித்து அறிந்த லதா தனது கணவரின் கள்ளக்காதலியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.

வாக்குவாததின்போது 'உன்னை விட நான் மிகவும் அழகாக இருக்கும்போது என் கணவர் ஏன் உன் மீது காதலில் விழுந்தார்?' என்று ஜியாவை பார்த்து லதா கேள்வி கேட்டுள்ளார்.

லாதா கேட்ட அந்த கேள்வியால் ஆத்திரமடைந்த ஜியா அவரது முகத்தை கொடூரமானதாக்க வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதற்காக தனது தோழியுடன் சேர்ந்து ஜியா திட்டம் தீட்டியுள்ளார்.

பின்னர், கடந்த சனிக்கிழமை லதாவுக்கு வெறொரு செல்போன் எண்ணில் இருந்து போன் செய்த ஜியா, அடையாளம் தெரியாத நபர் போல் பேசி உங்கள் கணவரின் கள்ளத்தொடர்பு குறித்து உங்களிடம் சில ரகசியங்களை கூற வேண்டும் அதற்காக குண்டலால் குப்தா நகருக்கு வரும் படி கூறியுள்ளார்.

அந்த செல்போனின் பேசியது ஜியா என்பதை அறியாத லதா தனது 2 வயது மகனை தோளில் சுமந்துகொண்டு குப்தா நகருக்கு சென்றுள்ளார்.

குப்தா நகரில் உள்ள தெரிவில் மகனை தோளில் சுமந்தவாறு லதா நடந்து சென்றுகொண்டிருக்க புர்கா உடை அணிந்து பைக்கில் தனது தோழியுடன் ஜியா பின் தொடர்ந்து வந்துள்ளார்.

அப்போது, லதாவை இடைமறித்த புர்கா அணிந்த ஜியா தான் வைத்திருந்த ஆசிட்டை லாதாவின் முகத்தில் வீசிவிட்டு பைக்கில் தப்பிச்சென்றார்.

ஜியா ஆசிட் வீசியதில் லதா மற்றும் அவரது இரண்டு வயது மகன் முகம் உள்பட உடலில் படுகாயம் ஏற்பட்டது. ஆசிட் வீச்சில் படுகாயமடைந்த லதா அலறி துடித்தார். இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லதா மற்றும் அவரது குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் லதா மற்றும் அவரது குழந்தை மீது ஆசிட் வீசிவிட்டு தப்பிச்சென்ற ஜியாவை கைது செய்தனர்.    

Tags:    

மேலும் செய்திகள்