டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்களால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை

டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்களால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Update: 2022-07-23 06:58 GMT

புதுடெல்லி,

டெல்லி ரெயில் நிலையத்தில் ரெயில்வே ஊழியர்களால் பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகார் தொடர்பாக ரெயில்வே பாதுகாப்பு படையிடம் தெரிவித்ததாவது;

பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் தனது கணவனை விட்டு பிரிந்துள்ளார். அப்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் இடையேயான விவாகரத்து வழக்கு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.

இதனிடையே, அப்பெண்ணுக்கு அவரது நண்பர் மூலம் டெல்லி ரெயில் நிலையத்தில் மின் பராமரிப்பு ஊழியராக வேலை செய்யும் ஒரு நபரின் நட்பு ஏற்பட்டுள்ளது. ரெயில்வேயில் வேலை செய்துவரும் அந்த நபர் அப்பெண்ணுக்கும் ரெயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இருவரும் தொடர்ந்து பழகி வந்துள்ளனர். நேற்று முன் தினம் அந்த நபர் தனது மகனின் பிறந்த நாள் மற்றும் தான் புதிதாக கட்டிய வீட்டின் நிகழ்ச்சிக்கு வருமாறு அப்பெண்ணிடம் கூறியுள்ளார். இதைநம்பிய அப்பெண் நேற்று முன் தினம் இரவு 10 மணியளவில் கிர்த்திநகர் மெட்ரோ ரெயில் நிலையத்திற்கு வந்துள்ளார். அங்கு வந்த அந்த ஆண் நபர் அப்பெண்ணை அழைத்துக்கொண்டு டெல்லி ரெயில் நிலையத்திறு வந்துள்ளார்.

அங்கு மின் பராமரிப்பு ஊழியர்கள் ஓய்வு அறையில் சிறிது நேரம் இருக்கும்படி கூறியுள்ளார். இதை நம்பிய அப்பெண் அந்த அறையில் இருந்துள்ளார்.

அப்போது, தன்னுடன் வேலை பார்க்கும் சக ரெயில்வே ஊழியர்கள் 3 பேருடன் வந்த அந்த நபர் அப்பெண்ணை அந்த அறையில் வைத்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

அந்த நபரும் அவரது கூட்டாளியும் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த நிலையில் 2 பேர் அந்த அறைக்கு வெளியே காவலுக்கு நின்றுள்ளனர்.

கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அப்பெண்ணை அங்குள்ள ரெயில்வே நடைமேடை 8-ல் விட்டுவிட்டு சென்றுவிட்டனர். பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட பெண் அங்கேயே மயங்கி விழுந்துள்ளார். அப்போது அங்கு இருந்த ரெயில்வே ஊழியர்கள் அப்பெண்ணை மீட்டுள்ளனர். ரெயில்வே ஊழியர்களிடம் தனக்கு நடந்த பாலியல் வன்கொடுமை குறித்து அப்பெண் விவரித்துள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ரெயில்வே ஊழியர்கள் இது குறித்து ரெயில்வே பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே பாதுகாப்பு படையினர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த 2 பேர் உள்பட 4 பேரையும் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்