புலியுடன் சண்டையிட்டு குழந்தையை காப்பாற்றிய வீரப்பெண்

மத்திய பிரதேசத்தில் புலியுடன் சண்டையிட்டு ஒன்றரை வயது மகனை பெண் ஒருவர் காப்பாற்றியுள்ளார்.;

Update: 2022-09-07 09:56 GMT

போபால்

மத்திய பிரதேசம் பந்தாவ்கர் புலிகள் சரணாலயத்திலுள்ள புலி ஒன்று அங்கிருந்து வெளியேறி, அருகிலுள்ள ரோஹானியா கிராமத்துக்குள் புகுந்துள்ளது.

இதை அறியாமல் ஒரு வயது மகனை தூக்கிக் கொண்டு பெண் ஒருவர் விவசாய நிலத்துக்கு சென்றுள்ளார். அப்போது மறைந்திருந்த புலி, திடீரென பாய்ந்து 2 பேரையும் தாக்கியுள்ளது. இதில் மகனுக்கு தலையில் காயம் ஏற்பட்டது. பெண்ணுக்கு உடல் முழுவதும் காயம் ஏற்பட்டது. மகனை கவ்வி செல்ல முயன்ற புலியுடன் போராடி தனது மகனை போராடி அப்பெ காப்பாற்றியுள்ளார். புலி அதன் நகங்களால் பலமுறை அவரைத் தாக்கியது.

அப்பெண்ணின் அலறல் சத்தம் கேட்டு கிராம மக்கள் ஓடிவந்து, புலியை விரட்டியடிக்கவே, 2 பேரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்