ஆந்திராவில் மது போதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய பெண் - 8 வாகனங்கள் சேதம்
விபத்தை ஏற்படுத்திய பெண் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.;
ஐதராபாத்,
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள வி.ஐ.பி. சாலையில் நேற்று இரவு சொகுசு கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. பின்னர் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களின் மீது மோதி, அருகில் இருந்த மரத்தின் மீது ஏறியபடி கார் நின்றது.
அந்த காரை ஒரு பெண் ஓட்டியதாகவும், அவர் மது போதையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. விபத்தை ஏற்படுத்திவிட்டு அந்த பெண் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இந்த சம்பவத்தில் 8 வாகனங்கள் கடுமையாக சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.