கேரளாவில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி

திருச்சூரில் பன்றி காய்சலுக்கு பெண் உயிரிழந்ததையடுத்து சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.;

Update: 2024-09-05 20:15 GMT

திருச்சூர்,

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள எரவு பகுதியைச் சேர்ந்தவர் மினி (வயது 62). இவர் கடந்த 10 நாட்களாக காய்ச்சல் மற்றும் தலைவலியால் அவதிப்பட்டு வந்தார். இதையடுத்து அவர் சிகிச்சைக்காக திருச்சூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பரிசோதித்த போது அவருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது தெரியவந்தது.

இதனால் மினிக்கு தனி வார்டில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் தொடர் கண்காணிப்பில் இருந்து வந்தார். நேற்று காலை சிகிச்சை பலனின்றி மினி பரிதாபமாக இறந்தார். பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலியானதையடுத்து, திருச்சூர் மாவட்டத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு உள்ளார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்