வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை

மண்டியாவில் வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை செய்துகொண்டார்.

Update: 2022-06-24 21:21 GMT

மண்டியா:

மண்டியா மாவட்டம் கே.ஆர்.பேட்டை தாலுகா காரிகானஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் மது. இவரது மனைவி ஷகானா (வயது 35). திருமணத்தின் போது ஷகானாவின் பெற்றோர் வரதட்சணையாக நகை, பணம் கொடுத்திருந்தனர். இருப்பினும் கூடுதல் வரதட்சணை கேட்டு மதுவும், அவரது குடும்பத்தினரும் ஷகானாவை கொடுமைப்படுத்தி வந்ததாக தெரிகிறது.

இதனால் மனம் உடைந்த ஷகானா நேற்று தற்கொலை செய்துகொண்டார். இதுபற்றி அறிந்ததும் ஷகானாவின் குடும்பத்தினர், உறவினர்கள் மதுவின் வீட்டையும், காரையும் அடித்து நொறுக்கினர். இதுதொடர்பாக கிக்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்