3 பிள்ளைகளை கொன்று பெண் தற்கொலை
3 பிள்ளைகளை கொன்று பெண் தற்கொலை செய்துகொண்டார்.
பாகல்கோட்டை:
பாகல்கோட்டை தாலுகா திம்மலாபுரா கிராமத்தில் வசித்து வந்தவர் ரேகா(வயது 28). இவருக்கு சன்னதி(7), சம்ரித்தி(4), ஸ்ரீநிதி(2) ஆகிய 3 பெண் குழந்தைகள் இருந்தனர். ரேகாவின் கணவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு இறந்து விட்டார். இதனால் கூலி வேலை செய்து பிள்ளைகளை ரேகா காப்பாற்றி வந்தார். இந்த நிலையில் குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து ரேகா வருத்தத்தில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மதியம் மாம்பழ ஜூசில் விஷத்தை கலந்து 3 குழந்தைகளுக்கும் ரேகா கொடுத்து உள்ளார். விஷம் கலந்த ஜூசை குடித்த சிறிது நேரத்தில் 3 குழந்தைகளும் வாயில் நுரைதள்ளி பரிதாபமாக இறந்தனர். பின்னர் ஜூசில் விஷம் கலந்து குடித்து ரேகாவும் தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் பாகல்கோட்டை புறநகர் போலீசார் அங்கு சென்று 4 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து பாகல்கோட்டை புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.