பெண் எரித்துக் கொலை; மர்மநபர்களுக்கு வலைவீச்சு

பெங்களூரு அருகே பெண் எரித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

Update: 2023-03-02 18:45 GMT

கக்கலிபுரா:-

பெங்களூரு புறநகர் மாவட்டம் கக்கலிபுரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட முனேஷ்வராசாமி கோவில் அருகே உள்ள வனப்பகுதியில் ஒரு இளம்பெண் உடல் கருகிபடி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் கக்கலிபுரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அந்த பெண்ணுக்கு 30 வயது இருக்கும். அவர் யார்? எந்த பகுதியை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை.

அந்த பெண்ணை வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, அவரை உடலை வனப்பகுதிக்கு கொண்டு வந்து மர்மநபர்கள் எரித்தது தெரியவந்துள்ளது. அந்த பெண்ணின் முகம், உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு எரிந்திருந்தது. என்ன காரணத்திற்காக அந்த பெண் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து கக்கலிபுரா போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்