ஓடும் ரெயிலில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை - அதிர்ச்சி சம்பவம்
ஓடும் ரெயிலில் பெண்கள் பெட்டியில் கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த நபரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மராட்டிய மாநிலம் தெற்கு மும்பையில் உள்ள பிரபாதேவி பகுதியில் இருந்து சர்ச் கேட் பகுதிக்கு நேற்று மாலை 20 வயது நிரம்பிய கல்லூரி மாணவி புறநகர் ரெயிலில் பயணம் செய்துள்ளார். அந்த கல்லூரி மாணவி ரெயிலில் பெண்கள் மட்டும் பயணிக்கும் பெட்டியில் பயணம் செய்துள்ளார். அந்த பெட்டியில் வேறு யாரும் பயணிக்கவில்லை. கல்லூரி மாணவியை மட்டும் தனியாக பயணம் செய்துள்ளார்.
ரெயில் ஷர்னி சாலை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில வினாடிகளில் ஒரு நபர் பெண்கள் பெட்டியில் ஏறியுள்ளார். அந்த பெட்டியில் கல்லூரி மாணவி மட்டும் தனியாக பயணித்துள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட அந்த நபர் கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியில் தொல்லை கொடுத்துள்ளார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்த மாணவி கத்தியுள்ளார். சர்ச் கேட் நிலையம் அருகே ரெயில் மெல்ல வர மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த அந்த நபர் ரெயில் இருந்து கிழே குதித்து தப்பியோடியுள்ளார்.
இது குறித்து அந்த கல்லூரி மாணவி ரெயில்வே போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஒடும் ரெயிலில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பிச்சென்ற பப்பு குப்தா என்ற நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.