இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 556- பேருக்கு கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 556- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

Update: 2022-11-19 04:39 GMT

புதுடெல்லி,

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 556- பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாட்டில் கடந்த சில மாதங்களாகவே கொரோனா பாதிப்பு சரிந்து வருகிறது. தொற்று பரவல் கட்டுக்குள் வந்திருப்பதால் மக்களும் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர். நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு விவரத்தை மக்கள் நல்வாழ்வு மற்றும் மருத்துவத்துறை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 556- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. நாட்டில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 68 ஆயிரத்து 523- ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5 லட்சத்து 30 ஆயிரத்து 570 ஆக உள்ளது. கொரோனா பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளவர்கள் எண்ணிக்கை 6,782- ஆக குறைந்துள்ளது. நேற்று இந்த எண்ணிக்கை 7,034 ஆக இருந்தது.

Tags:    

மேலும் செய்திகள்