மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியை மேலும் அதிகரிக்கட்டும் - பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் என நாட்டு மக்கள் அனைவருக்கும் பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டெல்லி,
இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் தீபாவளி பண்டிகை இன்று வெகுவிமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மக்கள் புத்தாடை உடுத்தி, இனிப்புகளை வழங்கி, பட்டாசு வெடித்து தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில், நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். தீபாவளி வெளிச்சம் மற்றும் பிரகாசத்துடன் தொடர்புடையது. இந்த மங்களகரமான பண்டிகை நம் வாழ்வில் மகிழ்ச்சியையும், நல்வாழ்வையும் மேலும் அதிகரிக்கட்டும். நீங்கள் உங்கள் குடும்பம் மற்றும் நண்பர்களுடன் சிறபான தீபாவளியை கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.