முகலாய பெயர்களில் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்படவேண்டும் - பாஜக தலைவர்

முகலாய பெயர்களில் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

Update: 2023-01-29 10:28 GMT

கொல்கத்தா,

டெல்லியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் பிரம்மாண்ட தோட்டம் உள்ளது. பல்வேறு அழகு மலர்கள் பூத்துக்குலுங்கும் இந்த தோட்டம் முகலாய தோட்டம் என்று அழைக்கப்பட்டு வந்தது.

75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் ஜனாதிபதி மாளிகையில் உள்ள முகலாய தோட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றியுள்ளது. முகலாய தோட்டம் இனி அமிர்த தோட்டம் என்று பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை ஜனாதிபதி மாளிகை நேற்று வெளியிட்டது.

இந்நிலையில், முகலாய பெயர்களில் உள்ள இடங்கள் கண்டறியப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டுமென மேற்குவங்காள பாஜக தலைவர் தெரிவித்துள்ளார்.

மேற்குவங்காள பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி இது குறித்து கூறுகையில், முகலாயகர்கள் இந்து மதத்தினர் நிறைய பேரை கொன்று, இந்து மத வழிபாட்டு தலங்களை அழித்துள்ளனர். முகலாயர்கள் பெயரில் உள்ள இடங்களை கண்டறிந்து பெயர் மாற்றம் செய்யவேண்டும். மேற்குவங்காளத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒரு வாரத்திற்குள் பிரிட்டிஷார், முகலாயர்கள் பெயர்களில் உள்ள இடங்களுக்கு பெயர் மாற்றம் செய்யப்படும்' என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்