வாடகை கார் சேவையை வழங்கி வரும் உபர் நிறுவனத்தை ஓலாவுடன் இணைக்க திட்டமா? மறுப்பு தெரிவித்த ஓலா!

வாடகை கார் சேவை நிறுவனமாக திகழும் ஓலா மற்றும் உபர் ஆகிய இரு நிறுவனங்களும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது.

Update: 2022-07-30 11:50 GMT

பெங்களூரு,

வாடகை கார் சேவையை வழங்குவதில் முன்னணி நிறுவனமாக திகழும் ஓலா மற்றும் உபர் ஆகிய இரு நிறுவனங்களும் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் இந்த தகவலை ஓலா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனர் பவிஷ் அகர்வால் மறுத்துள்ளார்.

ஓலா மற்றும் உபர் நிறுவனங்கள் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாக செய்தி வெளியானது. இந்த நிலையில் இது குறித்து ஓலா தலைமை நிர்வாகி பவிஷ் அகர்வாலிடம் கேட்கப்பட்டது. அப்போது பதில் அளித்த அவர் கூறுகையில் இது தவறான தகவல் என்றும் எவ்வித பேச்சுவார்த்தைகளும் ஈடுபடவில்லை என்றும் தெரிவித்தார். அதேபோல உபர் நிறுவனமும் இந்த தகவலை மறுத்துள்ளது.

இது குறித்த டுவிட்டரில் பதிவிட்டுள்ள ஓலா நிறுவனர், "இது ஒரு குப்பை தகவல். எங்கள் நிறுவனம் லாபகரமாக வளர்ந்து வருகிறது. வேறு சில நிறுவனங்கள் இந்தியாவில் இருந்து வெளியேற விரும்பினால் நாங்கள் அதை வரவேற்கிறோம். ஆனால் ஒருபோதும் வேறு நிறுவனத்தை எங்களுடன் இணைத்துக்கொள்ள மாட்டோம்" என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு உபர் தனது உணவு விநியோக நிறுவனமான உபர் ஈட்ஸ் நிறுவனத்தை சொமேட்டோ நிறுவனத்திற்கு விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது. இதன் அடிப்படையிலேயே உபர் நிறுவனம் ஓலாவுடன் இணைய உள்ளதாக தற்போது செய்திகள் வெளியாகி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்