கிராமத்திற்குள் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை

ஹலகூரில் கிராமத்திற்குள் புகுந்து காட்டுயானை அட்டகாசம் செய்து வருகின்றன. அவைகளை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Update: 2022-09-21 18:45 GMT

ஹலகூர்:

காட்டுயானைகள் அட்டகாசம்

மண்டியா மாவட்டம் ஹலகூருவை அடுத்து அமைந்துள்ளது பீமனகிண்டி வனப்பகுதி. இந்த வனப்பகுதியில் இருந்து அடிக்கடி காட்டுயானைகள் கிராமத்திற்கு வந்து விளைபயிர்களை நாசப்படுத்திவிட்டு செல்கின்றன. அதேபோல் கடந்த சில நாட்களுக்கு முன்பு 5 யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பலேஹொன்னிகா, குண்டாப்பூர், எச்.பசாபுரா பகுதியில் சுற்றி கிராம மக்களை அச்சுறுத்தியது.

இதைப்பார்த்த பொதுமக்கள் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர் அந்த 5 காட்டுயானைகளையும் வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர். இந்நிலையில் நேற்று மீண்டும் அந்த காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறி பானசமுத்திரம் வழியாக யாத்தம்பாடி, ஓஸ்பூர் வழியாக அந்தரவள்ளி பகுதிக்கு வந்தது.

வனப்பகுதியில் விரட்ட நடவடிக்கை

இதை அறிந்த வனத்துறையினர் மீண்டும் வந்து யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். அப்போது யானைகள் சிம்ஷா ஆற்றை கடக்கும்போது வழி தவறிவிட்டது. இருப்பினும் அந்த யானைகளை பின்தொடர்ந்து சென்று விரட்டும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

இதில் ஒரு யானை தொரேகாடனஹள்ளி தேசிய நெடுஞ்சாலையை கடந்தது. மீதமுள்ள 4 யானைகள் வழி தவறி சென்றது. அந்த யானைகளை தேடும் பணியில் வனத்துறையினர் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக 50 வன ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர் என்று கூறப்படுகிறது.

.....

Tags:    

மேலும் செய்திகள்