அசாம்: தேயிலை தோட்டத்தில் இறந்து கிடந்த காட்டு யானை

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை நேற்று இரவு இறந்து கிடந்தது.;

Update: 2022-12-07 08:03 GMT

கோப்புப்படம்

சோனித்பூர்,

அசாமின் சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் காட்டு யானை நேற்று இரவு இறந்து கிடந்தது.

சோனித்பூர் மாவட்டத்தில் உள்ள பலிபாரா அருகே உள்ள அடபரி தேயிலை தோட்ட ஊழியர்கள் இறந்து கிடந்த யானையை பார்த்ததும், உடனடியாக உள்ளூர் வனத்துறை அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் தேயிலை தோட்டத்தின் வரிசை எண் 23-ல் யானை இறந்து கிடப்பதை கண்டனர்.

இதுகுறித்து அமரிபாரி சென்ட்ரல் துணை ரேஞ்சர் அனில் போர்தாகூர் கூறும்போது, "இந்த சம்பவம் குறித்து நாங்கள் உயர் அதிகாரி மற்றும் கால்நடை மருத்துவருக்கு தெரிவித்துள்ளோம். காட்டு யானையின் இறப்புக்கான சரியான காரணம் கண்டறியப்படும்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்