திருப்பதியில் பக்தர்கள் தங்கும் அறை வாடகை உயர்த்தப்பட்டது ஏன்.?- தேவஸ்தானம் விளக்கம்

திருப்பதி தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

Update: 2023-01-13 10:05 GMT

திருப்பதி,

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் உள்ள அன்னமய்யா பவனில் தேவஸ்தான முதன்மை செயல் அலுவலர் தர்மா ரெட்டி நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் சாதாரண மற்றும் நடுத்தர பக்தர்களின் வசதிக்காக ரூ 50, 100 குறைந்த வாடகையில் அறைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதற்காக திருப்பதி மற்றும் திருமலையில் 7500 அறைகள் கட்டப்பட்டுள்ளன. இந்த அறைகள் ரூ.120 கோடியில் வெந்நீர் மற்றும் பர்னிச்சர் வசதியுடன் நவீனப்படுத்தப்பட்டு உள்ளன.

இருப்பினும் வாடகை உயர்த்தப்படவில்லை. நாராயணகிரி எஸ் பி ஆர் எஸ் சிறப்பு ஓய்வு இல்லங்கள் நவீனப்படுத்தப்பட்டு விஐபி பக்தர்களுக்கு வாடகை உயர்த்தி வழங்கப்படுகிறது. சாதாரண பக்தர்களுக்கு குறைந்த வாடகையில் வழங்கப்படும் அறைகளின் பராமரிப்பு மற்றும் மின் கட்டண செலவு ஒரு நாளைக்கு ஒரு 250 ஆகிறது.

மேலும் பக்தர்களின் வசதிக்காக பிஎஸ்சி ஐந்து என்ற கட்டிடம் 100 கோடியில் கட்டப்படுகிறது. மேலும் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் கொண்டுவரும் பொருட்களை வைப்பதற்காக 7,500 இலவச லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளன. பக்தர்களின் செல்போனை வைத்துவிட்டு செல்வதற்காக லாக்கர்கள் வைக்கப்பட்டுள்ளது. 15 ஆயிரம் பக்தர்கள் தங்குவதற்கு இலவச தங்குமிடம் வழங்கப்படுகிறது. அறைகள் தங்குமிடங்கள் லாக்கர்கள் கழிப்பறைகள் குளியலறை இலவசமாக வழங்கப்படுகிறது.

ரங்கம்மா அன்னதான பவனில் தினமும் லட்சுக்கணக்கான பக்தர்களுக்கு 3 வேலை இலவச உணவு வழங்கப்படுகிறது. அறையில் இருந்து உணவு கூடத்திற்கு வர முடியாத பக்தர்களுக்கு அந்தந்த பகுதியிலேயே கவுண்டர்கள் திறந்து உணவு வழங்கப்படுகிறது.

திருப்பதியில் தரிசனத்திற்கு வரும் பக்தர்கள் ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இன்றி திருப்பதியில் காலடி எடுத்து வைத்தது முதல் சாமி தரிசனம் வரை பைசா செலவு இல்லாமல் தேவஸ்தானம் உணவு, குடிநீர் பால், டிபன், மருத்துவ சேவை, இலவச முடி காணிக்கை, ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல இலவச பஸ் வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச பேட்டரி வாகன வசதியும் செய்யப்பட்டு உள்ளன.

ஒவ்வொரு பக்கதருக்கும் 1 லட்டு இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தைகளுக்கு இலவச நவீன மருத்துவம் வழங்குவதற்காக ரூ.320 கோடியில் சூப்பர் மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

 

Tags:    

மேலும் செய்திகள்