கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் கால தாமதம் ஏன்? வானிலை ஆய்வு மையம் தகவல்
கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க மேலும் தாமதம் ஆகலாம் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.;
திருவனந்தபுரம்,
கேரளாவில் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கும். கடந்த ஆண்டு ஒருவாரம் முன்கூட்டியே பருவமழை தொடங்கியது. ஆனால் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை தொடங்க தாமதம் ஆகும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அதன்படி கடந்த 1-ந் தேதி கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கவில்லை. இதற்கான அறிகுறிகளும் தென்படவில்லை.
இதுபற்றி இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,
"கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்க இன்னும் 4 நாட்கள் ஆகும். தென் அரபிக்கடலில் மேகமூட்டம் அதிகரித்து வருகிறது. இது தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழ்நிலைகளை காட்டுகிறது. எனவே இன்னும் 4 நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கலாம்" என கூறியுள்ளது.